Thursday, October 8, 2009

Namitha Birthday Celebration



நடிகை நமீதா 4 ஆண்டுகளுக்கு பிறகு தனது பெற்றோருடன் பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார். அவரது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னையில் நமீதா ரசிகர் மன்றத் தலைவர் செல்வம் மற்றும் பிஆர்ஓ ஜான் ஆகியோர் நமீதா பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கோடம்பாக்கத்தில் உள்ள காக்கும் கரங்கள் ஆதரவற்றோர் விடுதிக் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி, மதிய உணவு போட்டு, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் நமீதா பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பாண்டிச்சேரியில் நமீதா ரசிகர் மன்றம் சார்பில் 7 ட்யூஷன் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வசதியற்ற மாணவ மாணவிகள் இலவசமாக ட்யூஷன் படிக்கலாம். இவர்களுக்கு தன்னார்வ அடிப்படையில் 7 ஆசிரியர்கள் பாடம் சொல்லித் தருகிறார்கள். இவர்கள் அனைவரும் தனி வேனில் இன்று சென்னை வந்து நமீதா பிறந்த நாள் விழாவில் பங்கேற்றனர். அதேபோல கோவை சோமையனூரில் அமைந்துள்ள நநீதா மாலை நேர ட்யூஷன் சென்டரில் படிக்கும் 76 குழந்தைகளுக்கு இலவச பாட- நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த மையத்துக்கு 3 கம்ப்யூட்டர்களையும் நமீதா சார்பில் வழங்கினர் செல்வம் மற்றும் பிஆர்ஓ ஜான் ஆகியோர்.


பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து நமீதா கூறுகையில், "நான் கடைசியாக 2005ம் ஆண்டுதான் என் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடினேன். அதன்பிறகு தொடர்சச்சியான படங்கள், சூட்டிங் காரணமாக படப்பிடிப்புகளிலேயே பிறந்த நாள் கொண்டாடி வந்தேன். என் தாத்தாவுக்கு என்மேல் அளவுகடந்த பாசம். இந்த முறை பிறந்த நாளுக்கு மும்பை வந்துவிட வேண்டும் என்று அவர் கண்டிப்பாகக் கூறிவிட்டார். அவர் வேண்டுகோளை தட்ட முடியவில்லை. அதனால் மற்ற வேலைகளையெல்லாம் தள்ளிப் போட்டுவிட்டு, குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ந்தேன், என்றார்.

0 comments:

Post a Comment

Recent Comments

Powered by Blogger Widgets