இதுவரைக்கும் 200 விளம்பர படங்களில் நடிச்சிருக்கேன். அதுல எல்லாம் கிடைக்காத திருப்தி என்னோட 2வது படத்தில் கிடைச்சிருக்கு. ஏன்னா... என்னோட ரோல் மாடலா நினைச்சிட்டு இருக்கிற கமல் சார் கூட ஒர்க் பண்ணுன சந்தோஷம்தான் காரணம். ''அபியும் நானும்'' படத்தில் த்ரிஷாவின் சாக்லேட் லவ்வராக வந்து பிரகாஷ்ராஜை பாடாய் படுத்தி எடுக்கும் சர்தார்ஜி கேரக்டரில் அறிமுகமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். 200க்கும் அதிகமான விளம்பர படங்களில் தலைகாட்டியிருக்கும் கணேஷின் 2வது படம் "உன்னைப் போல் ஒருவன்". இந்த படத்தில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ள கணேஷ் வார்த்தைக்கு வார்த்தை கமல் புகழ் பாடி வருகிறார். அவரது பேட்டி:
உங்க அறிமுகம்?
ராதா மோகன் இயக்கத்தில் "அபியும் நானும்" திரைப்படத்தில் "த்ரிஷா" லவ்வராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிரகாஷ்ராஜ் சார் கூட முதல் படத்தில் நடித்தது மிகப் பெரிய அனுபவமாக இருந்தது.
சினிமாவுக்கு கலர் என்பது எவ்வளவு முக்கியம்?
சினிமாவிற்கு கலர் என்பது முக்கியமல்ல, நல்ல தரமான பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய கலகலப்பான ஸ்கிரிப்ட் தான் முக்கியம். என்னை கேட்டால் ஸ்கிரிப்ட் தான் ஹீரோன்னு சொல்வேன்.
சப்போர்ட் கேரக்ட்ராகவே நடிக்கிறீர்களே... தனி ஹீரோ வாய்ப்பு கிடைக்கவில்லையா?
எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும், அதுமாதிரி எனக்கு ஒரு "லைப் டைம்" கனவு கமல் சாரோடு நடிக்கனும்னு. அது உன்னைப்போல் ஒருவனில் நிறைவேறி இருக்கு. பிரகாஷ்ராஜ், கமல் சார் மாதிரி ஆர்ட்டிஸ்ட் கூட நடிக்கும்போது நிறைய கற்றுக் கொள்ள முடியுது. பெரிய பேனர், கதை எல்லாம் நல்லா அமையும் போது, எந்த "பிரஷரும்" இல்லாம ஒர்க் பண்ண முடியுது. என்னாலும் தனி ஹீரோவா நடிக்க முடியும்.
நீங்க அறிமுகமான விளம்பரத்துறை பற்றி சொல்லுங்க?
காமிரா முன்னால என்ன நடிக்க வச்சதே விளம்பரங்கள் தான். 200க்கும் மேற்பட்ட விளம்பரங்கள் பண்ணிருக்கேன். என்னை மக்கள் கிட்ட கொண்டு போய் நிறையவே சேர்த்திருக்கு, நான் லேட்டஸ்டா பண்ண விளம்பரம் சத்யராஜ் சார் கூட பண்ணின போத்தீஸ் விளம்பரம்.
நீங்க ஒரு சாக்லேட் பாய், ஆக்ஷன் மூவி எல்லாம் ஒத்து வருமா?
முதல் படத்தில் நீங்க நினைக்கிற மாதிரி சாக்லேட் பாயா இருக்கலாம், ஆனால் உன்னைப்போல் ஒருவனின் "ரப் அன்ட் டப்" போலீஸ் ஆபிசராக நடிச்சப்பவே, என்னால் ஆக்ஷன் பிலிம் பண்ணமுடியும்னு தோணுச்சு.
சினிமாவில் நீங்க கண்டு ஆச்சரியப்படும் ஆர்ட்டிஸ்ட் யாரும் இருக்காங்களா?
வாவ்! கமல் சார் இருக்காரே, அவர் வந்து 50 வருஷம் ஆயிடுச்சு, சினிமாவுல அவர் பண்ணாத சாதனைகளே இல்ல . தயாரிப்பாளரா, இயக்குநரா, சிங்கரா, டான்சரா என பல துறைகளில் எனக்கு அவர் தான் ரோல் மாடல்.
உன்னைப் போல் ஒருவனில் நடிக்க பேலீஸ் ஆபிசர் பயிற்சி எதும் எடுத்துகிட்டிங்களா?
நிச்சயமா, நேர்மை தவறாத ஒரு போலீஸ் அபிசர் எப்படி இருக்கனும், நடக்கனும், பார்க்கனும், அவங்க "பாடி லாங்வேஜ்" எப்படி இருக்கனும், இப்படி எல்லாத்துக்கும் பயிற்சி எடுத்துகிட்டேன். ஆண்டி டெரரிசம் தலைமையிடம் மும்பையில் இருக்கு அதில் ஒரு மாதம் துணை கமிஷனர் திரு. சுக்விந்தர் சிங், கமிஷனர் திரு. குலாவ் ராவ் இவங்ககிட்ட பயிற்சி எடுத்துகிட்டேன். அதேபோல் புனேயில் ஒரு மாசம் போலீஸ் டிரைனிங் எடுத்துகிட்டேன். தீவிரவாதி தாக்குதலை எப்படி தடுக்கறது, அவங்ககிட்டேர்ந்து எப்படி உண்மையை வரவழைக்கிறது இப்படி நிறைய சொல்லலாம்.
இயக்குநர் சக்ரியா பற்றி சொல்லுங்க?
ஸ்டைலிஷ் இயக்குநர், எந்த பதட்டமும் இல்லாம ஒர்க் பண்ணுவார். எப்ப டவுட் இருந்தாலும் கோபமே இல்லாம தெளிவு படுத்துவார். நான் நல்லா பண்ணிருக்கேனா அது சக்ரியாக்கு தான் போய்ச் சேரும்.
0 comments:
Post a Comment