Thursday, October 8, 2009

Madurai To Theni


ஒரு பேருந்து பிரயாணத்தில் ஏற்படும் பால் ஈர்ப்பையே காதலாக்கி, கசிந்து உருக விட்டு, படம் பார்ப்பவர்களையும் உருக விட்டிருக்கும் கதையை உள்ளடக்கிய படம்தான் மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி.

ஊரில் காதலை எதிர்க்கும் பெற்றோர்களை எதிர்த்து காதலர்களை சேர்த்து வைக்கும் புனித பணியை (?) மேற்கொண்டிருக்கும் ஹீரோவிற்கு ஆசிரியர் வேலை கிடைக்கிறது. அந்த வேலையை ஏற்றுக் கொள்ள மதுரையில் இருந்து தேனி அரு‌கில் இருக்கும் கிராமத்திற்கு பேருந்தில் கிளம்புகிறார் நாயகர். அந்த பேருந்தில் அவருக்கு காதலியும் கிடைக்க, ஊர் காதலை எல்லாம் சேர்த்து வைத்த ஹீரோ விடுவாரா என்ன? அவர் இறங்க வேண்டிய கிராமத்தில் தனக்காக காத்திருக்கும் நண்பர்களிடம் தன் பையை கொடுத்து விட்டு அதே நேருந்தில் நாயகியின் வசிப்பிடத்திற்கே தேடி புறப்படுகிறார் ஹீரோ. நாயகி இறங்கும் குக்கிராமத்தில் பெண் கேட்டு, நாயகியின் முறை மாமன்களால் பஞ்சாயத்தில் நிறுத்தப்படுவதும், அதன் பின் என்ன? என்பதும் தான் மேற்படி படத்தின் மொத்த கதையும்!

இதில் முன்பாதி படமும், பின் பாதியில் முன்பகுதி படமும் பேருந்திலும், பேருந்து சார்ந்த இடங்களிலுமே படமாக்கப்பட்டிருப்பதால் கதையும், படத்தில் இடம்பெறும் சோலைமலை பேருந்து வேகத்திலேயே முக்கால்வாசி பிரயாணிக்கிறது. மீதி கால்வாசியும் மதுரை, தேனி பக்கம் கோவில் வாசலில் நடக்கும் பஞ்சாயத்து, முரி வைத்தல் என புதுமையாக முரட்டு மாமன்கள், அசட்டு டீக்கடை முதலாளி சிங்கமுத்து, நாயகியின் வாயாடி அம்மா சாந்தினி, கதாநாயகனின் சித்தப்பா சுருளிப்பட்டி சிவாஜி உள்ளிட்டவர்களால் ஜெட் வேகத்தில் நகர்வது படத்திற்கு பெரிய பலம். இதுநாள் வரை நம் சினிமாவில் காட்டப்படும் பஞ்சாயத்திற்கும், தெருவில் நடைபெறும் பஞ்சாயத்துகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அழகாக படம் பிடித்து காட்டியதாற்காகடே இயக்குனர் ரதிபா‌லாவை பாராட்ட வேண்டும்.

கதாநாயகராக அரவிந்த் வினோத் பாத்திரத்தை உணர்ந்து பல இடங்களில் சாந்தமாகவும், சில இடங்களில் பாந்தமாகவும் நடித்து வந்தோமா... போனோமா.. ஹீரோக்கள் லிஸ்ட்டில் இடம் பிடிக்காமல் தப்பித்து விடுகிறார். ‌பேஷ்.. பேஷ்...! நாயகி ஸ்ரித்திகா, புன்னகை இளவரசி எனும் பட்டம் பெரும் முயற்சியில் படம் முழுக்க சிரித்தபடியே வளைய வருகிறார். க்ளைமாக்ஸில் மட்டும் சற்றே நடித்து சபாஷ் சொல்ல வைக்கிறார்.

பஸ் கண்டக்டர் ரஜினியாக ராஜ்குமார், சிங்கமுத்து, குமரிமுத்து, நெல்லை சிவா, முத்துக்காளை, திருமங்கலம் கலைராசு, சுருளிப்பட்டி சிவாஜி, சாந்தினி, முறைமாமன் ராசுக்குட்டி பிரகாஷ் உள்ளிட்ட பழைய, புதிய நடிகர்களுடன் சோலைமலை பேருந்தும் ஒரு பாத்திரமாக படம் முழுக்க பரவி இருப்பது வாவ் சொல்ல வைக்கிறது.

எல்லோரது பிரயாணத்திலும் இது மாதிரி ஒரு காதல் எங்கிட்டாவது ஒரு ஓரத்தில் ஒளிந்து கொண்டிருக்கலாம். அதையே சற்று கற்பனையாக சேர்த்து அழகான கதையாக்கி, கருவாக்கி, படமாக்கி இருக்கும் இயக்குனர் ரதிபாலாவின் கதை, திரைக்கதை, இயக்கத்திற்கு சுருளிப்பட்டி சிவாஜியின் இயல்பான வசனமும், எஸ்.பி.‌எஸ்.குகனின் குளிர்ச்சியான ஒளிப்பதிவும், ஜேவியின் மலர்ச்சியான இசையும், கார்த்திக் சுப்பிரமணியத்தின் அளகான படத்தொகுப்பும் பக்கபலமாக இருந்து இப்படத்தை வெற்றிப் படமாக்கியுள்ளது.

மொத்தத்தில் இந்த படத்தை பார்க்கும் நாமும் மதுரைக்கும் தேனிக்கும் ஆண்டிபட்டி வழியாக சோ‌லைமலை பேருந்தில் பயணித்த பிரம்மை ஏற்படுத்துகிறது. அதுவே இதன் வெற்றி!!

மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி : யதார்த்தம் டூ வெற்றி வழி தமிழ் சினிமா!!
தினமலர் விமர்சனம்

0 comments:

Post a Comment

Recent Comments

Powered by Blogger Widgets