Thursday, October 8, 2009

Tamil Nadu Awards


தமிழக அரசு 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2007ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது, "சிவாஜி' படத்துக்காக ரஜினிகாந்துக்கும், 2008ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது, "தசாவதாரம்' படத்துக்காக கமல்ஹாசனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது, முதல்வர் கருணாநிதிக்கு (உளியின் ஓசை) அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின், 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளுக்கு பரிந்துரைக்க, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரை அப்படியே ஏற்கப்பட்டு, விருது பெறுவோர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன் விவரம்:

கடந்த 2007ம் ஆண்டுக்கான சிறந்த படம் முதல் பரிசு - சிவாஜி,
இரண்டாம் பரிசு - மொழி,
மூன்றாம் பரிசு - பள்ளிக்கூடம்,
சிறப்புப் பரிசு - பெரியார்,
பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் - மிருகம்,
குடும்ப நெறிகளை பிரதிபலிக்கிற படம் - தூவானம்
சிறந்த நடிகர் - ரஜினிகாந்த் (சிவாஜி),
சிறந்த நடிகை - ஜோதிகா (மொழி),
சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு - சத்யராஜ் (பெரியார்),
சிறந்த நடிகை சிறப்புப் பரிசு - பத்மபிரியா (மிருகம்),
சிறந்த வில்லன் - சுமன் (சிவாஜி),
சிறந்த நகைச்சுவை நடிகர் விவேக் (சிவாஜி),
சிறந்த குணச்சித்திர நடிகர் - எம்.எஸ்.பாஸ்கர் (மொழி),
சிறந்த குணச்சித்திர நடிகை - அர்ச்சனா (ஒன்பது ரூபாய் நோட்டு),
சிறந்த இயக்குனர் தங்கர் பச்சான் (பள்ளிக்கூடம்)
சிறந்த கதையாசிரியர் - வசந்த் (சத்தம் போடாதே),
சிறந்த உரையாடல் ஆசிரியர் - பாலாஜி சக்திவேல்,
சிறந்த இசையமைப்பாளர் - வித்யாசாகர் (மொழி),
சிறந்த பாடலாசிரியர் - வைரமுத்து,
சிறந்த பின்னணி பாடகர் - ஸ்ரீநிவாஸ்,
சிறந்த பின்னணி பாடகி - சின்மயி,
சிறந்த ஒளிப்பதிவாளர் - நீரவ்ஷா (பில்லா),
சிறந்த ஒலிப்பதிவாளர் - அய்யப்பன் (பில்லா),
சிறந்த எடிட்டர் - சதீஷ் குரோசோவா
சிறந்த கலை இயக்குனர் - தோட்டா தரணி,
சிறந்த சண்டை பயிற்சியாளர் - அனல் அரசு,
சிறந்த நடன ஆசிரியர் - பிருந்தா,
சிறந்த ஒப்பனைக் கலைஞர் - ராஜேந்திரன்,
சிறந்த தையல் கலைஞர் - அனுவர்தன்,
சிறந்த பின்னணி குரல் - கே.பி.சேகர், மகாலட்சுமி

2008ம் ஆண்டுக்கான சிறந்த படம் - முதல் பரிசு தசாவதாரம்,
இரண்டாம் பரிசு - அபியும் நானும்,
மூன்றாம் பரிசு - சந்தோஷ் சுப்பிரமணியம்,
சிறப்புப் பரிசு - மெய்ப்பொருள்,
பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படம் - பூ,
குடும்ப நெறிகளை பிரதிபலிக்கும் படம் முதல் பரிசு - வல்லமை தாராயோ,
இரண்டாம் பரிசு - வண்ணத்துப்பூச்சி,
சிறந்த நடிகர் - கமல்ஹாசன் (தசாவதாரம்),
சிறந்த நடிகை - சினேகா (பிரிவோம் சந்திப்போம்),
சிறப்புப் பரிசு - சூர்யா (வாரணம் ஆயிரம்),
சிறந்த நடிகை சிறப்புப் பரிசு - த்ரிஷா (அபியும் நானும்),
சிறந்த வில்லன் நடிகர் - ராஜேந்திரன் (நான் கடவுள்),
சிறந்த நகைச்சுவை நடிகர் - வடிவேலு (காத்தவராயன்),
சிறந்த நகைச்சுவை நடிகை - கோவை சரளா (உளியின் ஓசை),
சிறந்த குணச்சித்திர நடிகர் - பிரகாஷ் ராஜ்,
சிறந்த குணச்சித்திர நடிகை - பூஜா,
சிறந்த இயக்குனர் - ராதா மோகன்,
சிறந்த கதையாசிரியர் - தமிழ்ச்செல்வன்,
சிறந்த உரையாடல் ஆசிரியர் - கருணாநிதி (உளியின் ஓசை),
சிறந்த இசையமைப்பாளர் - இளையராஜா,
சிறந்த பாடலாசிரியர் - வாலி,
சிறந்த பின்னணி பாடகர் - பெள்ளிராஜ்,
சிறந்த பின்னணி பாடகி - மஹதி,
சிறந்த ஒளிப்பதிவாளர் - ஆர்தர் வில்சன்,
சிறந்த ஒலிப்பதிவாளர் - ரவி,
சிறந்த எடிட்டர் - பிரவீன் - ஸ்ரீகாந்த்,
சிறந்த கலை இயக்குனர் - ராஜீவன்,
சிறந்த சண்டை பயிற்சியாளர் - கனல் கண்ணன்,
சிறந்த நடன ஆசிரியர் - சிவசங்கர்,
சிறந்த ஒப்பனைக் கலைஞர் - மைக்கேல் வெஸ்ட்மோர், கோதண்டபாணி (தசாவதாரம்),
சிறந்த தையல் கலைஞர் - ரவீந்திரன்,
சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஸ்ரீலட்சுமி,
சிறந்த பின்னணி குரல் கொடுப்போர் - பிரகாஷ், சவீதா.


இதைதவிர, 2006ம் ஆண்டுக்கான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகளில், சிறந்த இயக்குனர் அன்பு, ஒளிப்பதிவாளர் தினேஷ், ஒலிப்பதிவாளர் ராம்குமார், எடிட்டர் சசிகுமார், படம் பதனிடுபவர் முருகன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டுக்கான விருதுகளில், இயக்குனர் கண்ணன், ஒளிப்பதிவாளர் ஆனந்தகுமார், ஒலிப்பதிவாளர் லட்சுமி நாராயணன், எடிட்டர் மர்பி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Recent Comments

Powered by Blogger Widgets