Thursday, October 8, 2009

Sibi's Next Movie




நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் நடிகர் ஆகி, தன் அப்பாவைப் போலவே நடிப்பில் தனக்கென தனி பாதையை வகுத்து வைத்துள்ளார். தற்போது அவர் நாணயம், கள்ளக்காதலன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். சத்யராஜ் ஹீரோவாக பல படங்களில் நடித்திருந்தாலும் வில்லன் கேரக்டரில் தனி முத்திரை பதித்தார். அதுபோலவே நானும் சாதிப்பேன் என்று சொல்லி வரும் சிபிராஜ, மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தென்னவன், ஜாம்பவான் படங்களை இயக்கிய டைரக்டர் நந்தகுமார் இயக்கும் சாந்து‌பொட்டு படத்தில் சிபிராஜ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார்? என்பது இன்னமும் முடிவாகவில்லை. எம்.ஸ்ரீதரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்கிறார்.


ஏற்கனவே மலையாளத்தில் திலீப் - கோபிகா நடிப்பில் சாந்துபொட்டு என்ற பெயரில் ஒரு படம் வெளியானது. மலையாள சாந்துபொட்டுக்கும், தமிழ் சாந்துபொட்டுக்கும் பெயரளவில் மட்டுமே ஒற்றுமை. மற்றபடி கதை முழுக்க முழுக்க புதுமையானது என்கிறார் டைரக்டர் நந்தகுமார்.

0 comments:

Post a Comment

Recent Comments

Powered by Blogger Widgets